Fri. Dec 20th, 2024

10-லட்சம் ரூபாய் ஏடிஎம் பணத்தை கொள்ளை அடித்த | வெளிநாட்டினர் இருவர் கைது |

ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற நைஜீரியன் கொள்ளையர்கள் கைது |

வங்கி ஏடிஎம் மையத்தில் பணத்தை நிரப்ப தனியார் நிறுவனங்கள் சில பணத்தை நிரப்பும் சேவையை எடுத்து செய்து வருகிறது.

கடந்த மாதம் 7ம் தேதி அன்று மதுரவாயலில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பணத்தை நிரப்ப தனியார் நிறுவன ஊழியர்கள் முற்படும்பொழுது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் ஊழியர்களை தாக்கி கோடாரியை வைத்து மிரட்டி ஊழியர்கள் ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்காக வைத்திருந்த சுமார் 10-லட்சம் ரூபாயை மிரட்டி கொள்ளை அடித்து சென்றனர்…

இதையடுத்து ஊழியர்கள் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது…

விசாரணையில் Africa நாட்டை சேர்ந்த 10- நபர்கள் சென்னையில் கல்லூரி படிப்பிற்கு வந்த நிலையில் அதில் 7-பேர் படிப்பை முடித்து விட்டு திரும்பியுள்ளதும் மீதம் 3-நபர்கள் படிப்பை முடிக்காமலும் கல்லூரிக்கு வராமல் நகருக்குள்ளே சுற்றி திரிவதாகவும் விசாரணையில் தெரிய வந்ததும் தீவிர தேடுதலுக்கு பிறகு இன்று நைஜீரியாவை சேர்ந்த Akomaye என்ற ஒருவரை சென்னையிலும் மற்றும் மைசூரில் Farrell என்ற இரண்டாவது குற்றவாளியையும் பிடித்து கைது செய்தனர்…

கைதானவர்கள் AFRICA நாட்டை சேர்ந்தவர் படிப்பை தொடராமல் பணம் கொள்ளை அடிக்கும் முயற்சியில் இறங்கியதாக ஒப்புக்கொண்டனர் இந்த கொள்ளை சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கு மதுரவாயல் காவல்துறைக்கு பேராண்மை.காம் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்…

நிருபர் வெ.ராம்