Fri. Dec 20th, 2024

ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவுடன் பிடிபட்ட மூதாட்டி |

ஈரோடு மாவட்டம் பவானி பழனியாண்டவர் கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் சின்னச்சி என்ற 68 வயதான மூதாட்டி இவர் கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில் மாறுவேடத்தில் சென்ற போலீசார் அந்த மூதாட்டியிடம் 5 கிராம் மதிப்பிலான கஞ்சாவை 100 ரூபாய் விலை கொடுத்து வாங்கினார்கள் மூதாட்டி தான் கஞ்சா விற்பனை செய்வதும் உறுதி செய்யப்பட்டதும் அவரை பிடித்து விசாரித்ததின் பேரில் மூதாட்டி 250 கிராம் மதிப்பிலான கஞ்சா மட்டுமே தன்னிடம் உள்ளதாக கூறினார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து மேற்படி விசாரணை செய்ததில் மற்றொரு வீட்டில் 12- கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது இதன் மதிப்பு 5-லட்சம் ரூபாய் இதனைத் தொடர்ந்து சின்னச்சியிடம் 12- கிலோ 750-கிராம் மதிப்பிலான கஞ்சா மற்றும் 53-ஆயிரம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்…

நிருபர் சண்முகசுந்தரம்