கர்ப்பிணிகளுக்கு ஊசி போடவே லஞ்சம் கேட்ட செவிலியர்
கர்பிணி பெண்களுக்கு அரசின் உதவி தொகை வாங்கி தர கர்பிணிகளிடம் கிராம செவிலியர் லஞ்சம் கேட்பதாக கூறி, கிராம செவிலியரை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.கர்பிணிகளின் போராட்டத்தால் கிராம செவிலியரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட சுகாதார துணை இயக்குநர் நடவடிக்கை.
திருவள்ளூர் மாவட்டம் நாலூர் துணை சுகாதார நிலையத்தில் கிராம செவிலியராக பணி புரிந்து வருபவர் தங்கரத்தினம்.இவர் கிராம நாலூர் பகுதியில் உள்ள கர்பிணி பெண்களுக்கு அரசின் உதவி தொகை வாங்கி தரவும், ஊசி போடவும், ₹1000 முதல் ₹2000 வரை லஞ்சம் கேட்பதாகவும் பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.ஏற்கெனவே கர்பிணிகளிடம் லஞ்சம் கேட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செவிலியர் தங்கரத்தினம், நாலூர் துணை சுகாதார நிலையத்திற்கு மீண்டும் மாற்றலாகி வந்த இவர், கர்பிணிகளிடம் லஞ்சம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மீஞ்சூர்-திருவொற்றியூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் போலீசார், சமாதானம் பேசி அவர்களை கலைந்து போகும்படி செய்தனர்.ஆனால், அதில் திருப்தியடையாத கர்பிணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கிராம செவிலியர் தங்கரத்தினத்தை துணை சுகாதார நிலையத்திலேயே வைத்து சிறைப்பிடித்தனர்.செவிலியர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டம் விலக்கி கொள்ளப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அப்போது மீஞ்சூர் ஒன்றிய மருத்துவ அலுவலர் ராஜேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், சமாதனத்தை ஏற்காத கர்பிணிகள், செவிலியரை விடுவிக்கவில்லை.இதனிடையே, கர்பிணிகளின் போராட்டத்தையடுத்து, லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கியுள்ள கிராம செவிலியர் தங்கரத்தினத்தை நாலூர் ஆரம்ப துணை சுகாதாரத்தில் இருந்து ஏ.ஆர்.பாளையம் பகுதியில் உள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு மாற்றம் செய்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார்.மேலும், மாவட்ட தாய்-சேய் நல அலுவலர் வரும் வெள்ளிக்கிழமைக்குள் விரிவான அறிக்கை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.இதனையடுத்து, கிராம செவிலியர் தங்கரத்தினம், ஏ.ஆர்.பாளையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த செவிலியர் தங்கரத்தினத்தை மீட்ட போலீசார், அவரை பத்திரமாக வாகனத்தில் ஏற்றி பணியிட மாற்றம் செய்த ஏ.ஆர்.பாளையத்திற்கு அழைத்து சென்றனர்…
AK@ஆனந்தகுமார்…