Fri. Dec 20th, 2024

மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது | காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் |

சென்னை வில்லிவாக்கத்தில் அரசு பள்ளி 4ம் வகுப்பு மாணவனை குச்சியால் தாக்கிய ஆசிரியர் மீது வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார்..

சென்னை வில்லிவாக்கம் பாரதி நகர் 2வது தெருவை சேர்ந்த மேரி, இவருடைய மகன் சாமுவேல். இவர் வில்லிவாக்கத்தில் உள்ள சிட்கோ நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார் அங்கு ஆசிரியராக பணிபுரியும் லோகநாயகி நேற்று வகுப்பில் மாணவன் சாமுவேலுவை குச்சியால் தாக்கியதில் மாணவனுக்கு உடம்பு முழுவதும் வீக்கம் ஏற்பட்டது.

இது குறித்து மாணவன் நேற்று பள்ளி முடிந்து விட்டிற்கு வந்து தன்னுடைய அம்மா மேரியிடம் நடந்ததை கூறினார் அதிர்ச்சி அடைந்த மேரி மாணவர் சாமவேலுவை குச்சியால் தாக்கிய ஆசிரியர் லோகநாயகி மீது வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வில்லிவாக்கம் போலீசார் ஆசிரியர் லோகநாயகியிடம் விசாரணை மேற் கொண்டு பெற்றோர்களிடம் ஆசிரியை மன்னிப்பு கேட்டதை அடுத்து பெற்றோர் சமரசம் அடைந்து புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டனர்…

நமது நிருபர்