Fri. Dec 20th, 2024

வாக்காளர்களுக்கு வழங்கவா?| மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி |

வாக்காளர்களுக்கு வழங்க ரேஷன் அரிசி? | மூட்டை மூட்டையாக பறிமுதல் |

சென்னை கொடுங்கையூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி பழனி தலைமையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் உள்ள சிலம்பு நகர் முதல் தெருவில் சிலர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்குவதாக வந்த தகவலை அடுத்து அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று சோதனையிட்டதில் அங்கு இருந்த ஒரு வீட்டில் சுமார் 40க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அரிசி வைக்கப்பட்டிருந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் கொடுங்கையூர் காவல்துறையினர் உதவியோடு உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ரேசன் அரிசிகளை பதுக்கியதாக வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் அண்ணாநகரில் உள்ள குடோனுக்கு அரிசி மூட்டைகளை அனுப்பி வைத்தனர் மேலும் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியை கடத்திச் செல்லும் கும்பல் இங்கு ரேஷன் அரிசியை வைத்து உள்ளதா..? அல்லது ஏதேனும் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுக்க அரிசி மூட்டைகளை வைத்துள்ளார்களா.? என்ற கோணத்தில் அதிகாரிகளும் கொடுங்கையூர் காவல்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

நமது நிருபர்…