தலைக்கவசம் அணிவதன் அவசியம் புரியாதவர்களுக்கு | காவல்துறை விழிப்புணர்வு |
தலைக்கவசம் அணிவதன் அவசியம் புரியாதவர்களுக்கு | காவல்துறை விழிப்புணர்வு |
சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் அருகே தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை மற்றும் சொமாட்டோ (zomato) இணைந்து நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் அருண், இணை ஆணையர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு தலைக் கவசத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார் கூடுதல் கமிஷ்னர் அருண்…
கடந்த ஆண்டு சென்னையில் சாலை விபத்தில் 1297 பேர் இருந்துள்ளனர் இதில் 792 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள்.
இதில் தலைக்கவசம் அணிந்தவர்கள் வெறும் 23 பேர் மட்டுமே எனவே தலைக்கவசம் அணிவது மிகவும் முக்கியமானது.
தலைக்கவசம் அணிவதன் அவசியம் சென்னை மக்களுக்கு மட்டும் புரியவில்லை தலைக்கவசம் அணியாமல் சென்றால் 100 ரூபாய் தான் அபராதம் என்று மெத்தனமாக இருக்கின்றவர்களுக்கு அவர்களின் உயிர் குறித்து அக்கறை இல்லை கடந்த ஆண்டு சாலை விதிமுறைகளை மீறி வழக்குகள் மட்டும் 24 லட்சம் பதிவாகி உள்ளது அவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை 27 கோடி. அதில்
தலைக்கவசம் அணியாதவர்களின் அபராத தொகை 4.50 கோடி என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் அருண் தெரிவித்தார்…
நமது நிருபர்