இளைஞரின் விலா எலும்பில் கத்தியால் குத்திய முதியவர் கைது |
இளைஞரை கத்தியால் விலா எலும்பில் குத்திய முதியவர் கைது |
வில்லிவாக்கத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து விலா எலும்பில் சிக்கிய கத்தி உடைந்து மருத்துவமனையில் அனுமதி…
வில்லிவாக்கம் பலராமபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் தமிழ்அன்பு வயது 33, தனியார் நிறுவனத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணியை செய்து வருகிறார் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி /60 மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார் நேற்று மாலை தமிழ்அன்பு வீட்டின் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கான கம்பிகளை வீட்டின் அருகே இறக்கி வைத்துள்ளார் இது தொடர்பாக இரு வீட்டார்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது நேற்று சுந்தரமூர்த்தி அந்த இரும்பு கம்பிகளை இழுத்து சென்று தெரு முனையில் போட்டு விட்டதாகவும்…
வெளியே சென்று இருந்த தமிழ் அன்பு இது குறித்து சுந்தரமூர்த்தி வீட்டில் தகராறில் ஈடுப்பட்டதாகவும் வாக்குவாதம் முற்றி இருவரும் தாக்கி கொண்டனர் இதில் ஆத்திரம் அடைந்த சுந்தரமூர்த்தி மறைத்து வைத்து இருந்த காய்கறி கத்தியை எடுத்து தமிழ் அன்பு விழா எலும்பில் குத்தியுள்ளார் இதில் கத்தி உடைந்து விலா எலும்பில் சிக்கி கொண்டது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக தமிழ்அன்பை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்…
சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆபத்தான நிலையில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்… அங்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் விலா எலும்பில் சிக்கி இருந்த கத்தியை அகற்றினர்கள்..
தகவல் அறிந்த வில்லிவாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சுந்தரமூர்த்தி என்பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்…
நமது நிருபர்..