Fri. Dec 20th, 2024

பொள்ளாச்சி பாலியல் வீடியோ, புகைப்படங்களை வெளியிட கூடாது |மத்திய குற்றப்பிரிவு இயக்குனர் திரு.அன்பு |

பொள்ளாச்சி சம்பவம் குறித்து வீடியோ, புகைப்படங்களை வெளியிட கூடாது | மத்திய குற்றப்பிரிவு இயக்குனர் திரு.அன்பு |

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை தெரியாமல் பகிர்ந்து கொண்டால் கூட அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசாரால் கைது செய்ய முடியும் என்று காவல்துறை அறிவித்தது…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியான வீடியோ சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பாக பேசிய சென்னை மத்திய குற்றப்பிரிவு இயக்குனர் அன்பு IPS அவர்கள் பாலியல் வழக்குகள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை தெரியாமல் பகிர்ந்தால் கூட அது குற்றம் தான் என்று கூறினார். பகிரப்பட்ட புகைப்படம் அல்லது வீடியோவில் இருப்பது ஒரு சிறாராக இருந்தால் அதனை பதிவு செய்தவர் மீது போக்சோ சட்டத்தின்
கீழ் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

பொள்ளாச்சி சம்பவங்கள் போன்ற வீடியோக்களை பகிர்ந்து கொள்வது வழக்கின் தன்மையை பாதிக்கும் என்று காவல்துறை அதிகாரி அன்பு கூறியுள்ளார். இதனால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று குற்றவாளிகள் தரப்பு வாதாடுவதற்கும் இடமளித்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல தொலைக்காட்சிகளின் பெயரில் சமூக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்களின் உண்மை தன்மையை ஆராயாமல் பதிவு செய்ய கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்…

நிருபர் வெ.ராம்