Sat. Dec 21st, 2024

விளைநிலத்தில் எண்ணெய் குழாய்கள் | விவசாயிகள் பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டம் |

விளைநிலத்தில் எண்ணெய் குழாய்கள் |
விவசாயிகள் பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டம் |

விளைநிலங்கள் வழியாக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டம்.

கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெங்களூர் மாவட்டம் தேவன்கொந்தி வரை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் எண்ணெய் குழாய் பதிப்பதற்காக திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கோவை, ஈரோடு, நாமக்கல் என ஏறக்குறைய 7- மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் கொண்டு செல்வதால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இத்திட்டத்தை சாலையோரமாக கொண்டு செல்ல வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் சென்னிமலை அத்திக்காடு என்ற இடத்தில் பாரத் பெட்ரோலியம் எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கெயில் கேஸ் திட்டம் சாலையோரமாக கொண்டு செல்லப்படும் என்று 2013ம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்ததை போல் இத்திட்டத்தையும் சாலையோரமாக கொண்டு செல்ல முதல்வர் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

அரசியல் கட்சிகள் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்து விளைநிலங்களை BPCL நிறுவனத்திடம் இருந்து காப்பாற்றி தருகிறவர்களுக்கு மட்டுமே எங்கள் வாக்குகளை அளிப்போம் என்று தெரிவித்தனர்…

நிருபர் சண்முகசுந்தரம்