ஒரு பெண்ணை ஏமாற்றி மற்றொரு பெண்ணை மணமுடிக்க முயற்சி | தொழிலதிபர் மகன் குடும்பத்துடன் தலைமறைவு |
சென்னிமலையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல். பிரபல தொழிலதிபர் மகனுக்கு போலீஸ் வலை தொழிலதிபர் குடும்பத்தினருடன் தலைமறைவு…
ஈரோடு மாவட்டம், சென்னிமலை, ஈங்கூர் ரோட்டில் உள்ள காந்திஜி வீதியில் ஜவுளி தொழில் செய்து வருபவர் சாமியப்பன்,இவர் சென்னிமலை பகுதியில் பெரிய அளவில் நிதி நிறுவனம் நடத்தி வருவதால் இவரை வட்டியார் என இவரை அழைப்பார்கள்.
சென்னிமலை அருகே பெரியார் நகரை சேர்ந்தவர் பெயர் மாற்றப்பட்டது ஜானகி /26 பட்டதாரி. இவர் சிறு வயதாக இருந்த போது இவரது தந்தை மாதேஸ்வரன் இறந்து விட்டதால் தனது தாயாருடன் வசித்து வருகிறார் இவரிடம் கடந்த 8 மாதங்களுக்கு தொழிலதிபர் சாமியப்பன் மகன் ரகு என்கிற துரைராஜ் என்பவரின் ஜாதக நகலை தரகர் ஒருவர் கொடுத்திருக்கிறார் அந்த ஜாதக பொருத்தம் இருவருக்கும் பொருந்தியதால் ரகுவின் பெற்றோர்கள் பெயர் மாற்றப்பட்டது ஜானகி பெண் பார்க்க வந்துள்ளனர்…
பிறகு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு பெயர் மாற்றப்பட்டது ஜானகி, ரகுவும் செல்போன் மூலம் பேசிக்கொண்டதுடன் தங்களது நெருக்கத்தை அதிகப்படுத்தி உள்ளனர் இந்த நிலையில், தன்னை திருமணம் செய்வதாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஏமாற்றி விட்டதாக ரகு மற்றும் அவருடைய பெற்றோர் மீது பெயர் மாற்றப்பட்டது ஜானகி ஈரோடு மகளிர் போலீஸ் ஸ்டேசனில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் ஜானகி கூறியிருப்பதாவது… நான் பிஇஇசிஇ பட்டப்படிப்பு முடித்துள்ளேன். எனக்கு சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது. திருமண தரகர் ஒருவர் மூலம் எனக்கு ரகுவின் ஜாதக நகல் வந்தது. அந்த ஜாதகம் எங்களுக்கு பொருந்தி இருந்ததால் திருமணத்திற்கு உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு நான் ரகுவிடம் பேசி கொள்வதற்காக தனியாக எனக்கு ஒரு செல்போனை ரகு வாங்கி கொடுத்தார். மேலும் எங்கள் வீட்டிற்கு ரகு அடிக்கடி வர ஆரம்பித்தார் எங்கள் திருமணத்திற்கு மண்டபம் கிடைக்காமல் போனதால் திருமணம் தள்ளிக் கொண்டே போனது. இந்த நிலையில், நாங்கள் காம்ப்ளக்ஸ் ஒன்று கட்டி வந்தோம் அதற்கு ரகு ஆலோசனைகள் வழங்கி உறுதுணையாக இருந்தார்.
கடந்த ஆடி பண்டிகை அன்று ரகு எங்கள் வீட்டிற்கு வந்து கேக் வெட்டி எனக்கு கொடுத்தார் பின்னர் கடந்த டிசம்பர் 23-ந் தேதி இரவு எங்கள் வீட்டிற்கு ரகு வந்தார். அப்போது எனது அம்மா வெளியூர் சென்று விட்டதால் நான் தனியாக இருந்தேன். அந்த தனிமையை பயன்படுத்தி ரகு என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். நான் எவ்வளவோ மறுத்தும் என் விருப்பத்திற்கு மாறாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். திருமணம் ஆவதற்கு முன்பே என்னை இப்படி செய்து விட்டீர்களே என நான் கதறி அழுதேன் அதற்கு அவர், நான் உயிர் உள்ளவரை உன்னை கை விடமாட்டேன் என சத்தியம் செய்தார். மேலும் இதை வெளியில் சொல்ல வேண்டாம் என ரகு என்னிடம் சத்தியம் வாங்கினார்.
அதன்பின்னர் திருமணம் தள்ளிக்கொண்டே போனதால் நான் வாந்தி எடுத்தேன் இதனால் நான் ரகுவை வர சொல்லி இது பற்றி கூறினேன் மேலும் மருத்துவ சோதனை செய்து பார்த்த போது நான் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது நான் பயந்து போய் ரகுவிடம் சொல்லி அழுதேன் அதற்கு கவலைப்படாதே உன்னை எந்த சூழ்நிலையிலும் கை விடமாட்டேன் என சத்தியம் செய்து எனக்கு கருச்சிதைவு மாத்திரை வாங்கி கொடுத்தார்..
இதை தெரிந்து கொண்ட எனது உறவினர் ரகுவின் தந்தை சாமியப்பனை தொடர்பு கொண்டு இதுபற்றி கூறியபோது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் ரகுவின் தந்தை சாமியப்பனும், தாய் சுப்புலட்சுமியும் என்னை தரக்குறைவாக பேசினார்கள்.
அதன்பிறகு எங்கள் வீட்டிற்கு வருவதை ரகு நிறுத்தி கொண்டார். ஆனால் என்னை விட அதிகம் வசதியுள்ள வேறு பெண்ணை ரகு திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதும், இதற்காக ரகு வீட்டில் பந்தல் போட்டிருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி உறவினர்கள் மூலம் கேட்ட போது நல்ல முடிவை சொல்கிறோம் என கூறிய ரகுவின் பெற்றோர்கள் வீட்டை பூட்டி விட்டு கடந்த 6-ம் தேதி அதிகாலை வெளியூர் சென்று விட்டார்கள்.
நானும், ரகுவும் பேசியதை செல்போனில் பதிவு செய்துள்ளேன் என் விருப்பத்திற்கு மாறாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து என்னை தாய்மை அடைய செய்தும், கருவை கலைத்தும் எனக்கு மாறாத களங்கத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்திய ரகு மீதும், அவரது தந்தை சாமியப்பன், தாய் சுப்புலட்சுமி ஆகியோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில்
ஜானகி கூறியுள்ளார்.
மேலும் ரகுவும், ஜானகி சந்தித்த நெருக்கமான வீடியோ சிடி, செல்போன் உரையாடல்கள் மற்றும் புகைப்படங்களையும் ஆதாரங்களாக ஜானகி போலீசில் கொடுத்துள்ளார் இந்த புகாரின் பேரில், பிரிவு-417, 376, 313, 294 (பி)ஆகிய 4+ பிரிவுகளின் கீழ் ஈரோடு மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரகு மற்றும் அவரது பெற்றோர்களை தேடி வருகிறார்கள்…
நிருபர் சண்முகசுந்தரம்