Fri. Dec 20th, 2024

கிணற்றில் இறந்த நிலையில் ஆயுதப்படை காவலர் கொலையா.? |

கிணற்றில் இறந்த நிலையில் ஆயுதப்படை காவலர் | உடல் கொலையா.? |

கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆயுதப்படை காவலர் கிணற்றில் இறந்த நிலையில் மீட்பு போலீசார் விசாரணை

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராமர் /26 என்பவர் கடந்த 7ஆம் தேதி முதல் 6-நாட்களுக்கு சிறு விடுப்பில் சென்றவர் நேற்று தேனி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட புதிய பஸ் நிறுத்தம் அருகில் மேரி மாதா மெட்ரிக்குலேஷன் பள்ளியின் பின்புறமுள்ள நேதாஜி சேகர் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சுமார்
50-அடி ஆழம் உள்ள கிணற்றில் கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் இறந்து மிதந்து கிடந்தார் கொலையா, தற்கொலையா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்…

நேற்று இரவு 7- மணியளவில் தேனி காவல் நிலைய ஆய்வாளர் திரு.முருகானந்தம் அவர்கள் தேனி தீயணைப்பு துறையினர் உதவியுடன் ராமரின் பிரேதத்தை மீட்டு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக தேனி மாவட்ட SBCID சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வீரய்யன் தகவல் தெரிவித்துள்ளார்…

நமது நிருபர்