Fri. Dec 20th, 2024

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை | கொலை செய்தவர் கைது |

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை | கொலை செய்தவர் கைது |

தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையில் வசந்தா /39 என்பவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அடையாள தெரியாத நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டார்..

தகவல் அறிந்து அங்கு வந்த கண்ணங்கோட்டை காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட வசந்தாவின் செல் போனை கைபற்றிய போலீசார் அதை வைத்து விசாரணை நடத்தியதில் அடுத்த 24-மணி நேரத்திற்குள் கொலை செய்தவரை கண்டறிந்து குற்றவாளியை கைது செய்தனர்…

கைது செய்த குற்றவாளி சொந்த ஊரான காரைக்குடி அருகே ஊகம்பட்டி சேர்ந்த கருணாநிதி/50 என்பவர் தான் கொலையை செய்ததாகவும் இதன் பின்னணியில் வசந்தா என்பவருக்கும் இவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் நாளடைவில் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பிரச்சனை ஏற்பட்டு அதன் விளைவாக கொலை நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்…

கொடுத்த பணத்தை கருணாநிதி திருப்பி கேட்ட போது வசந்தா
தர மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது இந்த ஆத்திரத்தில் கருணாநிதி வசந்தாவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு பெங்களூர் தப்பிக்க முயற்சிக்கும் நேரத்தில் காவல் துறையினர் கைது செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்…

நிருபர் வெ.ராம்