Fri. Dec 20th, 2024

வங்கி மோசடிகளை தடுக்க|காவல்துறை சார்பில் விழிப்புணர்வு குறும்படம்|

வங்கி மோசடிகளை பற்றிய | காவல்துறை சார்பில் விழிப்புணர்வு குறும்படம் |

வங்கி மோசடிகள் அதிகளவில் நடப்பதை தடுப்பதற்கும் பொது மக்களுக்கு வங்கி மோசடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவும் மற்றும் AXIS வங்கியும் இணைந்து சைபர் குற்றங்கள், மற்றும் வங்கி மோசடிகள் குறித்து விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன…

இதற்கு சென்னை காவல் ஆணையர் திரு.ஏ.கே.விசுவநாதன் அவர்கள் முயற்சியால் குறும்பட படப்பிடிப்பு இன்று சென்னை அண்ணா சாலை அருகே உள்ள D1- திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் குறும்படத்தை இயக்கி வருகிறார் குறும்பட இயக்குனர்…

காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் அப்போது தான் மக்களிடம் முழுமையாக சென்றடையும் என D1-காவல் நிலையம் உள்பகுதியில் இன்று குறும்படப்பிடிப்பு நடந்து வருகிறது..

இந்த குறும்படத்தின் முக்கிய அம்சமாக சென்னை குற்றப்பிரிவை சேர்ந்த சில காவல் அதிகாரிகள் இதில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன…?

சைபர் குற்றங்கள் மற்றும் வங்கி மோசடிகள் குறித்தும் இதன் மூலம் பொதுமக்கள் சிறந்த விழிப்புணர்வை அடைவார்கள் என்றே ஒரே நோக்கத்தோடு இக்குறும்படம் D1-காவல் நிலையத்தின் உள்ளேயே காவல் துறையினர் பங்களிப்போடு இன்று குறும்படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது ஒரு சில தினங்களில் சென்னை காவல் ஆணையர் அவர்கள் இந்த குறும்படத்தினை வெளியிடுவார் என தகவல்…

காவல்துறையும் மற்றும் AXIS வங்கியின் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை என்கிறார்கள் காவல் துறை உயரதிகாரிகள்…

நிருபர் வெ.ராம்