சென்னை அரசு பள்ளியில்|கல்விக்கு சீர் செய்யும் நிகழ்ச்சி|
கல்விக்கு சீர் செய்யும் நிகழ்ச்சி |
அரசு பள்ளிகளில் பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் கல்விக்காக கல்வி சீராக பள்ளிக்கு தேவையான பொருட்களை தாங்களே முன் வந்து அளிப்பது தான் கல்வி சீர் செய்வது..
இதை இன்று கல்வி சீர் செய்யும் நிகழ்ச்சி சென்னை புழுதிவாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளுடன் வீதி வீதியாக எடுத்து சென்று மாணவ, மாணவியர்களுக்கு, மற்றும் பள்ளிக்கு தேவையான பொருட்களை அவர்களாகவே முன்வந்து வாங்கி சீராக பள்ளிக்கு வழங்கியது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அரசு தொடக்கப் பள்ளிகளில் போதிய வசதிகள் இல்லாததால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தாமாகவே முன்வந்து பள்ளிக்கு தேவையான பொருட்களை விருப்பத்துடன் அளித்துள்ளனர்.
இதை கல்விக்கு சீர் செய்யும் நிகழ்ச்சி என சென்னை புழுதிவாக்கம் அரசு பள்ளியின் இன்று தலைமை ஆசிரியை குறிப்பிட்டுள்ளார் இந்த நிகழ்ச்சியில் கல்வி சிறப்பு விருந்தினராக கல்வி அலுவலர் திரு.வெங்கட் அவர்களும் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்…
பெற்றோர்கள் ஆசிரியர்கள் என தாமே முன்வந்து செய்த இந்த நல்ல விஷயம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது…
இதை துவக்கமாக வைத்து மற்ற அரசு பள்ளிகளிலும் நிச்சயம் இதுபோன்ற நிகழ்ச்சிகள் இனி நடத்தப்படும் என தெரிவிக்கின்றனர்…