போதையில் டிவி பார்க்க விடவில்லை என| மனைவியின் கையை வெட்டிய வீரன்|
போதையில் டிவி பார்க்க விடவில்லை என | மனைவியின் கையை வெட்டிய வீரன் |
சென்னை திருவல்லிக்கேணி அயோத்திகுப்பம் பகுதியை சேர்ந்தவர் வீரன்/56. மீன்பிடித் தொழில் செய்து வருகிறார் இவரது மனைவி உஷா /47.
வீரன் நேற்று இரவு கடலுக்கு சென்று விட்டு மதுபோதையில்
வீடு திரும்பியதாகவும் அப்போது அவரது மனைவி உஷா ஜெபம் செய்து கொண்டே இருந்துள்ளார்..
அந்த நேரத்தில் கணவர் வீரன் டிவியில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதாக கூறப்படுகிறது இதனால் எரிச்சல் அடைந்த உஷா வீரனை திட்டியுள்ளார் அதில் கோபமடைந்த வீரன் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து அவரது மனைவி உஷாவின் இரு கைகளிலும் வெட்டி விட்டு அவரது மார்பு பகுதியில் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பினார்.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த உஷாவை உடனடியாக அருகே உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து வீரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…