Fri. Dec 20th, 2024

நகைக்கு ஆசைபட்டு பணிக்கு அழைத்து வந்து |கொலை செய்த பயங்கரம்|

நகைக்கு ஆசைபட்டு பணிக்கு அழைத்து வந்து | கொலை செய்த பயங்கரம் |

கோவை பொள்ளாச்சி அருகே பெரியசாமி கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த 2 ஆம் தேதி அன்று அனைமலை காவல் நிலையத்தில் தனது தாய் பொன்னுதாய் என்பவர் காணவில்லை என புகார் ஒன்றை அளித்தார்..

விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குஞ்சிபாலயம் சிங்கநல்லூர் சாலை இடையேயான வழியில் குமார் என்பவரின் மில்லின் அருகே வயதான பெண்ணின் சடலம் கால்கள் கட்டியபடி கிடப்பதாக தகவல் வந்ததையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர்.

சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின் தான் விசாரணையில் அது காணாமல் போன பெண் பொன்னுதாய் என்பவரின் உடல் என்பதும் தெரியவந்தது.

பிறகு இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து மேற்கு பொள்ளாச்சி காவல் நிலைய அதிகாரிகள் குற்றவாளி யார் என்பதை கண்டறிய விசாரணையை தொடங்கினர்.

அதில் பொன்னுதாய் என்பவருடன் தினமும் மட்டை பணிக்கு உடன் செல்லும் ராமத்தாள் என்பவரை முதலில் அழைத்து விசாரணை செய்ததில் முரண்பாடாக பதில் கூறியதில் சந்தேகம்
அடைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பொன்னுத்தாய் என்பவருடன் ராமத்தாள் தினமும் வேலைக்கு செல்பவர் என்றும் கடந்த 2ஆம் தேதி அன்று தங்களின் பணி இரவு பணி என்பதால் பணிக்கு இரவில் சென்ற போது பொன்னுதாய் தினமும் அணிந்து வரும் தங்க நகைகள் மீது ஆசைகொண்டு அன்று இரவு வேலையே இல்லாமல் பணி உள்ளதாக ஏமாற்றி பொன்னுத்தாய் என்பவரை பணிக்கு அழைத்து வந்து திடிரென இன்று பணியில்லை என்று கூறி பொன்னுத்தாயை அருகில் உள்ள மில்லில் உறங்கி காலை செல்லலாம் என கூறிவிட்டு இரும்பு சம்பட்டியை கொண்டு பொன்னுத்தாய் உறங்கியபின் தலையில் அடித்து கொன்றதாக ராமத்தாள் தான் செய்த அசாத்திய விபரீதத்தை ஒப்புகொண்டார்.

மேலும் நகைகள் மீது உள்ள ஆசையில் இந்த சம்பவத்தை நிகழ்த்த பல நாள் திட்டம் தீட்டி வைத்த யோசனையை அன்று இரவு பயன்படுத்திகொண்டதாகவும் ஒப்புகொண்டார்.

கொலை செய்த பொன்னுத்தாயை தான் செய்த கொலையிலிருந்த தப்பித்துகொள்ள முதலில் எரித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததாகவும் மில்லின் வெளிபுறம் ஆள் நடமாட்டம் இருந்ததால் அதை விட்டுவிட்டு வெறும் கயிற்றால் பொன்னுத்தாயி கால்களை கட்டியபடி மில்லின் அருகே விட்டு தப்பி சென்றதாக ராமத்தாள் ஒப்புகொண்டதை போலீசார் வாக்குமுலமாக எடுத்துகொண்டு கைது செய்தனர்.

பின்னர் ராமத்தாள் தனது உடன் பணி செய்யும் பெண்ணின் திருடிய நகைகளை மீட்டனர்..‌

நிருபர்
வெ.ராம்