Fri. Dec 20th, 2024

குரோம்பேட்டை அருகில் ரயில் மோதி|ஆயுதபடை காவலர் பலி|

ரயில் மோதி ஆயுதபடை | காவலர் பலி |

விழுப்புரத்தை சேர்ந்தவர் திருலோகசந்தர்/27 இவர் புதுப்பேட்டையில் ஆயுத காவல்படையில் காவலராக பணியாற்றி வந்தார் இந்த நிலையில் இன்று இரவு பணி முடித்துவிட்டு தாம்பரம் செல்வதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலையம் வந்துள்ளார்.

அப்போது தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது குரோம்பேட்டை அருகில் எதிரில் வந்த எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியுள்ளது இதில் சம்பவ இடத்திலேயே திருலோகசந்தர் பரிதபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போலீசார் திருலோகசந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து எவ்வாறு நிகழ்ந்தது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…