Fri. Dec 20th, 2024

புளியந்தோப்பில் புதிதாக 2678 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்த காவல் ஆணையாளர் ஏ.கே.வி|

புளியந்தோப்பில் புதிதாக 2678 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்த காவல் ஆணையாளர் ஏ.கே.வி |

குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்யவும் சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும் பல குற்றச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள், வாகன விபத்துக்கள் மற்றும் வன்முறை சம்பவங்களின் போது உண்மை தன்மையை அறிந்து கொள்வதற்கு சிசிடிவி கேமரா காட்சிகள் பெரிதும் உதவியுள்ளன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமராக்களை சென்னை பெருநகர் முழுவதும் பொருத்தி குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், சென்னை பெருநகர் முழுவதும் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் அவர்கள் கேட்டுகொண்டார்.

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிசிடிவி கேமராக்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு சென்னை பெருநகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் உள்ள எம்.கே.பி நகர் காவல் சரகத்தில் 1049- சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும், புளியந்தோப்பு காவல் சரகத்தில் 866 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும், செம்பியம் காவல் நிலையத்தில் 761 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் என மொத்தம் 2678 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேற்படி புதிதாக பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை 5ம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் அவர்கள் பெரவள்ளூர், திருவள்ளூர் திருமண மண்டபத்தில் நாடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேற்படி கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்…

நிருபர்

வெ.ராம்