வீடு புகுந்து அனைவரையும் கட்டிபோட்டு திருடிய|திருட்டு கும்பல் கைது|
வீடு புகுந்து அனைவரையும் கட்டிபோட்டு திருடிய|திருட்டு கும்பல் கைது|
ஈரோட்டில் தெற்கு உட்கோட்ட பகுதியில் ஒரு வீட்டின் உள்ளே இரவு நேரத்தில் புகுந்து ஒரு குடும்பத்தையே கட்டிபோட்டு பல லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடி சென்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு பழைய பாளையம் இந்திராகாந்தி வீதி அருகே கே.ஆர்.ராமநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் கடந்த 28ம் தேதி அன்று வீட்டினுள் அனைவரும் தூக்கத்தில் இருந்த போது ஏதோ சத்தம் கேட்டு ஹால் க்கு ஒடி வந்த பார்த்த ராமநாதனின் மனைவி மற்றும் மகனின் கழுத்தில் அரிவாள் ஒன்றை வைத்து மிரட்டியபடி இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் நின்று கொண்டு இருந்ததை ராமநாதன் பார்த்ததும் ராமநாதனையும் அவரது மனைவி மகனையும் கயிற்றில் கட்டி போட்டு விட்டு வீட்டிற்கு வெளியே சுமார் 10 நபர்களுக்கும் மேல் இருப்பதாக பயமுறுத்தி ராமநாதனின் மனைவியின் தாலி செயின் மோதிரம் போன்ற தங்க நகைகளை சுமார் 25 சவரன் மதிப்பிலான நகைகள் மற்றும் வைரம்,வெள்ளி போன்றவை திருடி சென்று விட்டனர்.
ஈரோட்டில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் இருசக்கர வாகனத்தில் சிக்கி தப்ப முயன்றவர்களை பிடித்து விசாரணை செய்ததில் பிடிபட்ட இருவரும் தனது மற்றொரு இரண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்திரா காந்தி வீதியில் ராமநாதனின் வீட்டில் நகைகள் கொள்ளையடித்ததை ஒப்புகொண்டனர்.
குற்றவாளிகளான முகமது உசேன், சுபான் பாஷா, சத்தியசீலன், நந்தகுமார், மற்றும் முகமது பாசில் ஆகிய 5-பேர்களை போலீசார் கைது செய்தனர்…
நிருபர்
வெ.ராம்