Sat. Dec 21st, 2024

எழும்பூர் ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்த சிறுவனை|மீட்ட போலீசார்|

பெற்றோர் அடித்ததால் வீட்டை விட்டு ஓடி வந்த சிறுவனை எழும்பூர் ரயில்வே போலீசார் மீட்டனர்…

கும்பகோணத்தை சேர்ந்தவர் கருப்பையா இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார் இவருடைய மனைவி சுமதி இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள், மூத்த மகனுடைய பெயர் தனுஷ்கோடி/15 இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் இரண்டாவது மகன் பெயர் ஈஞ்ச குமார்/14 ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் இவர் இன்று காலை எழும்பூர் ரயில்வே நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார். இதை அறிந்த போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தது
ஈஞ்ச குமார் அவருடைய வீட்டில் உள்ள தண்ணீர் குடத்தை உடைத்ததாகவும் அதற்கு அவருடைய பெற்றோர் அவரை அடித்ததால் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார் பின்னர், போலீசார் அவரை எக்மோரில் உள்ள சிறுவர் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்…