Fri. Dec 20th, 2024

காவல் ஆய்வாளர் நாகராஜ் நாராயணன் மீது|CBCID போலீசில் புகார் அளித்த வெல்ஃபேர் கட்சி|

முகிலன் காணாமல் ஆக்கப்பட்டது முதல் இன்றுவரை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் அமைப்புகளும் மிகப்பெரிய அச்சத்தில் இருக்கக் கூடிய நிலையில்…

முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி வெல்ஃபேர் கட்சியின் சார்பாக நேற்று 1.3.18 மாலை சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியில் தெருமுனை கூட்டம் நடத்தி இருந்தோம் அந்த தெருமுனை கூட்டத்தின் புகைப்பட பதிவுகளை எனது mohammed Ghouse என்ற முகநூல் பக்கத்தில் நான் பதிவு செய்து இருந்தேன்.

அந்த பதிவுக்கு திரு. நாகராஜ் நாராயணன் என்பவர் “சமாதி” என பின்னூட்டம் இட்டுள்ளார். திரு. நாகராஜ் நாராயணன் யார் என்று அவருடைய முகநூல் பக்கத்தில் போய் பார்த்தோம் என்று சொன்னால் அவர் ராஜபாளையத்தில் உள்ள காவல் ஆய்வாளர் என்பது தெரியவந்துள்ளது.

ஆகவே தோழர் முகிலன் காணாமல் ஆக்கப்பட்ட விஷயத்தில் திரு. நாகராஜ் நாராயணனுக்கு தொடர்பு இருக்கும் என்று சந்தேகத்தை வெளிப்படுத்தும் விதமாக வெல்ஃபேர் கட்சி – ன் மாநில செயலாளர் முகமது கவுஸ் தலைமையில் வழக்கறிஞர்.ஷாஜஹான், வழக்கறிஞர். பாசில், வழக்கறிஞர்.தினேஷ் ஆகியோர் அடங்கிய குழு இன்று O2.03.19 மாலை 1.30 மணியளவில் சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., திரு. செந்தில்குமரன் – யிடம் முகநூல் ஆதாரங்களுடன் புகார் செய்யப்பட்டது.

நமது புகாரை ஏற்றுக்கொண்ட சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., திரு. செந்தில்குமரன் அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை அழைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

அனேகமாக திரு. நாகராஜ் நாராயணனுக்கு சம்மன் வழங்கப்பட்டு திங்கட்கிழமை விசாரனைக்கு அழைக்கப்படுவார் என நினைக்கிறேன்…