மகளை திருமணம் செய்து வைக்க மறுத்ததால்|வெட்டி கொலை செய்த மகளின் காதலன்|
மகளை திருமணம் செய்து வைக்க மறுத்ததால் | வெட்டி கொலை செய்த மகளின் காதலன் |
வேளச்சேரியில் பெண் வெட்டி படுகொலை
சென்னை கிண்டி நரசிங்கபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் ரேவதி/45. இவரது கணவர் ராமசந்திரன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு 2 மகள் உள்ளனர் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்..
இவரது மகள் ஜீவிதாவிற்கு கிண்டி மசூதி காலனியில் வசித்து வந்த கார் டிரைவர் வினோத்/27 என்பவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன் வினோத் நடவடிக்கை சரியில்லை என்று கூறி திருமணம் செய்து கொடுக்க ரேவதி மறுத்துவிட்டார்.
ஆனால் வினோத் பலமுறை ரேவதியிடம் மகளை திருமணம் செய்ய பிரச்சனை செய்துள்ளார் இது தொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு திருமணம் நிறுத்தப் பட்டது இந்த நிலையில் வினோத்திற்கும் ஜீவிதா இடையே மீண்டும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வினோத் மீண்டும் ரேவதியிடம் வந்து தனக்கு ஜீவிதாவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என கேட்டு உள்ளார் இதற்கு ரேவதி மறுத்து மகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.
இந்த நிலையில் கடந்த 5 தினங்களாக ஜீவிதாவை காணாமல் வினோத் தேடி உள்ளார். இதையடுத்து இரவு பணியை முடித்துவிட்டு வந்த ரேவதியை கிண்டி வண்டிக்காரன் தெருவில் வினோத் தனது நண்பருடன் வந்து வழி மடக்கி திருமணம் செய்து வைக்குமாறு கேட்டு உள்ளார்.
இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டது உடனே வினோத் தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேவதியின் கழுத்து, மார்பு பகுதியில் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றார்.
இதில் ரத்த வெள்ளத்தில் ரேவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார் இது குறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வினோத் மற்றும் அவரது நண்பர் இருவரையும் தேடி வருகின்றனர்…