JCB இயந்திரத்தை திருடி சென்ற நால்வரை|கைது செய்த திருப்பெரும்புதூர் போலீசார்|

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் காவல்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து திருடு போன ஜெசிபி இயந்திரத்தை தேடி வந்த நிலையில் வேலூரில் JCB ஜெசிபி இயந்திரத்தின் சக்கரம் (டையர்) விற்பனைக்கு உள்ளதாக கூறி வந்த நபரை காவல் நிலையத்திற்கு சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் வாகனத்தின் டையர்களை விற்பனை செய்ய வந்த நபரின் செல்போனை சோதனை செய்ததில் சில எண்கள் 4 குற்றவாளிகளின் எண்கள் என்பதை உறுதி செய்த போலீசார் அந்த எண்கள் இருக்கும் இடத்திற்க்கு GPRS உதவியுடன் அங்கு சென்ற போலீசார் குற்றவாளிகள் பிரபு,மோகன், அரவிந்த், வைரமுத்து என்ற நான்கு குற்றவாளிகளை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் இருப்பிடத்திலிருந்து JCB இயந்திரத்தை கண்டுபிடித்து உரிமையாளர் ஜெயசீலன் என்பவரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட குற்றவாளிகள் பல திருட்டு செயல்களில் ஈடுபட்டுள்ளதாக விசாரனையில் தெரிய வந்துள்ளது…


