Mon. Apr 7th, 2025

கோவை பேரூரில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல் கைது!

கோவை பேரூரில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல் கைது!

சென்னையில் என்னதான் சிசிடிவி கேமரா போன்ற நவீன வசதிகள் இருந்தாலும் கிராமப்புறங்களில் அது போன்று வசதிகள் இன்று வரை அமைக்கப்படவில்லை.

சமீபகாலமாக கிராமப்புறங்களில் மட்டும் குறி வைத்து தங்களின் கைவரிசைகளை காண்பித்து திருடி வருகின்றனர்…

அப்படி ஒரு சம்பவம் தான் இது, கோவை பேரூர் உட்கோட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது.

இதற்காக காவல்துறையும் பல வழிகளில் முயற்சி எடுத்து கொள்ளையடிக்கும் கும்பலை தேடி வந்திருக்கின்றர்.

கோவை காவல் அதிகாரிகள் கவனத்திற்க்கு எண்ணற்ற தொடர் கொள்ளை சம்பவம் குறித்து புகார்கள் வந்தன மேலும் இதற்காக தனிப்படை ஒன்றை அமைத்து விசாரணை செய்து கொள்ளையடிக்கும் கும்பலை நேற்று மடக்கி பிடித்துள்ளனர்.

பிடிப்பட்ட கொள்ளையர்களில் மதுரையை சேர்ந்த கருப்புசாமி மற்றும் கிருஷ்ணகுமார் என்பவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் வீட்டில் யாரும் இல்லாத வீடுகளின் பூட்டை உடைத்து திருடுவது இந்த நபர்களின் வழக்கமாம்.

இவர்கள் பெரும்பாலம் திருடிய இடங்கள் மதுக்கரை பேரூர் மற்றும் தொண்டாமுத்தூர் போன்ற காவல் நிலை எல்லைக்குட்பட்ட இடங்களில் தங்களின் கைவரிசையை ஐ வெகுஜோராக நடத்தியது தெரியவந்துள்ளது.

கொள்ளை கும்பலை பிடித்த தனிப்படை காவலர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கருப்புசாமி மற்றும் கிருஷ்ணகுமார் இவர்களிடம் இருந்து சுமார் 22 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் கைபற்றப்பட்டுள்ளன.

நிருபர்

  • வெ.ராம்