விபத்தில் இறந்த மருத்துவரின் மனைவி | உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை |
விபத்தில் இறந்த மருத்துவரின் மனைவி |
உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவில்லை |
கோவிலுக்கு செல்லும் போது நேர்ந்த விபரீதம் இறந்த பெண்ணின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராததால் மக்கள் கொந்தளிப்பு!
கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் டாக்டர் கனகராஜ் என்பவர் இவர் இதே பகுதி அம்பேத்கர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் தனது மனைவி மீனாவுடன் அம்பேத்கர் சாலை வழியாக கோவிலுக்கு சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் லேசான மழை பெய்துகொண்டிருந்தது மழையால் கவனம் சிதறிய கனகராஜ் எதிர்பாராத விதமாக தனது கட்டுப்பாட்டை இழந்தார் இதனால் அவரின் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அவரது மனைவி மீனா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது கணவர் டாக்டர் கனகராஜ் படுகாயமடைந்து ராயபேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.
சுமார் 7.15 மணியளவில் நடந்த இந்த விபத்தில் இறந்த போன மீனாவின் உடலை எடுத்த செல்ல ஆம்புலன்ஸ் எதுவும் வராத காரணத்தால் தான் மீனா பரிதாபமாக இறந்து போனதாகவும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் சரியாக 8.30 மணியளவில் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மீனாவின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிய போலீசார், உடற் கூராய்வுக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர்.
இந்த விபத்துக்குறித்து கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து மழையின் காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது ஏதேனும் வாகனங்கள் மோதி விபத்து நடந்ததா என்ற கோணங்களில் வழக்கை விசாரித்து வருகிறார்கள்.