Mon. Apr 7th, 2025

சென்னை மெரினாவில்| கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஆண் சடலம் |

சென்னை மெரினாவில்| கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஆண் சடலம் |

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் இப்ராஹீம்/55 இவர் கடந்த சில ஆண்டுகளாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

கேன்சர் நோய் என்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று கடும் வலியின் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் மதியம் முதல் காணவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

நேற்று மதியம் முதல் இவரின் உறவினர்கள் பல இடங்களில் இவரை தேடிவந்துள்ளனர்.

இந்த நிலையில் மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் ஒரு ஆண் சடலம் உள்ளதாக இன்று காலை அண்ணா சதுக்கம் D6 போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற் கூராய்வுக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் இப்ராஹிம் என்பது தெரியவந்துள்ளது. இவர் பொது இடத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டதால் இவர் மரணம் குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் தான் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பபட்டுள்ளதாக தெரிகிறது…