Sun. Oct 6th, 2024

போனில் அமைச்சருக்கு வணக்கம் தெரிவிக்காத பெண் தாசில்தாரை மிரட்டிய முன்னாள் MLA | வேடிக்கை பார்த்த DSP

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ரவண சமுத்தித்திரத்தில்  பொது பணித்துறைக்கு சொந்தமான வாய்கால் ஆக்கிரமைப்பு அகற்றும் பணி சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. உடன் அம்பை தாசில்தார் ராஜேஸ்வரி அவர்களும் இருக்க… அகற்றும் பணியில் ஈடுபடுவோருக்கு அம்பை சரக துணை கண்காணிப்பாளர் ஜாகீர் உசேன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.


சப் கலெக்டர் ஆகாஷ்
அம்பை தாசில்தார் ராஜேஸ்வரி

அப்போது அங்கு வந்த அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி.ராஜேந்திரன் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் உச்சிமாகாளி ஆகிய இருவரும்… பொதுமக்கள் பிரதிநிதியாக பேசுவதாக கூறி தராரில் ஈடுபட ஆரம்பித்தனர். உடனே அவர்களிடம் உதவி ஆட்சியார் ஆகாஷ்… தங்களிடம் கோர்ட் ஆர்டர் இருக்கிறது. அதனால் எங்கள் பணியை செய்ய விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

உடனே உதவி ஆட்சியார் கேரளாவை சேர்ந்தவர் என்பதால்… அவரிடம்… சட்டப்படி உங்க வேலைய பண்றதா இருந்தா கேரளாவிற்கு போய் செய்யணும்… இது தமிழ்நாடு…. இங்க உன்னோட பருப்புலாம் வேகாது… நா நினைச்சா முதலமைச்சர் வரைக்கும் இந்த பிரச்சினைய கொண்டு போவேன்…  பாக்குறியா பாக்குறியா என்று சிங்கம் சூரியா பாணியில் பேசிவிட்டு… உடனே தன்னோட கைபேசியை எடுத்து அமைச்சர் வேலுமணி அவர்களுக்கு போன் செய்து… அதை தாசில்தார் ராஜேஸ்வரி அவர்களிடம் கொடுத்திருக்கிறார்… அவர் போன்ல என்ன சொன்னார்னு தெரியல… பின் அந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.

சரி பிரச்சினை முடிந்தது என்று நினைத்தால்… பி.ஜி.ராஜேந்திரன் மற்றும் உடன் வந்த உச்சிமாகாளி ஆகிய இருவரும் அப்பொழுதுதான் புதிதாக ஒரு பிரச்சினைய உருவாக்க ஆரம்பிக்கிறார்கள்.

வாக்குவாதத்தில் ஈடுபடும் அதிமுக முன்னாள் MLA
பி.ஜி.ராஜேந்திரன்

அது என்னவென்றால்… அமைச்சர் வேலுமணியிடம் போனில் பேசிய தாசில்தார் ராஜேஸ்வரி அவர்கள்… பேச ஆரம்பிக்கும் பொழுது.. அமைச்சருக்கு வணக்கம் வைக்கலையாம்… அது பிரச்சினைன்னு சொல்லி… ராஜேஸ்வரி அவர்களை பொதுமக்கள் மத்தியில்  திட்டி அவமானப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு இடையில் அம்பை சரக துணை கண்காணிப்பாளர் ஜாகிர் உசேன் அவர்கள் மிச்சர் தின்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.

டி.எஸ்.பி ஜாகீர் உசேன்

பின்னர் கடையம் காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பி.ஜி.ராஜேந்திரன் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் உச்சிமாகாளி ஆகிய இருவர் மீதும் தாசில்தார் ராஜேஸ்வரி அவர்கள் அழித்த புகாரின்பேரில் Section 294b – 353 – 506/2 women harrasment ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனால் அந்த வழக்கை சந்திக்க பயந்து போய் சென்னை வந்த பி.ஜி.ராஜேந்திரன் முதல்வரை சந்திக்க போவதாக தகவல்..!?!?!?!