Tue. Jan 7th, 2025

2 கிலோ தங்கத்துக்கு ஆசைப்பட்டு 2 லட்சம் போச்சி | காஞ்சிபுரத்தில் நூதன மோசடி..!!!

கடந்த 17 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பாலுசெட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் தொலைபேசி மூலம் தங்களிடம் 2 கிலோ தங்க நகைககள் இருப்பதாகவும் அதை மிக குறைந்த விலைக்கு தருவதாகவும் ஆசை வார்த்தை போனில் கூறியபடி நேரில் வந்து வாங்கிகொள்ளும் படி கூறி மணிகண்டனை வரவழைத்துள்ளனர்.

இதை நம்பி வந்த மணிகண்டனை ஏமாற்றி மிரட்டி சுமார் ரூ.2,00,000/- இரண்டு லட்சம் ரொக்க பணத்தை பிடுங்கி சென்றுள்ளனர். இது தொடர்பாக பணத்தை பறிகொடுத்த மணிகண்டன் காஞ்சிபுர பாலுசெட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு நூதன கொள்ளையர்களை சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் தங்கள் கொள்ளையடிக்கும் பொழுது பயன்படுத்திய மோட்டார் வாகன எண்ணை வைத்து கயவர்களை பிடித்து 403, 420, 397, மற்றும் 392 போன்ற பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்தனர்.

கைது செய்த குற்றவாலிகளில் ஒருவர் சிங்காரவேலன் என்பவர் என்றும் இவர் ஏற்கனவே வேலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் மொத்தம் 6 கொலைகளை செய்து விட்டு தலைமறைவாக சுற்றி வந்தவர் என்பதும் காவல்துறையினர் அளித்த கூடுதல் தகவல். பிடிப்பட்ட 3 கயவர்களிடமிருந்து சுமார் 14 லட்சம் மதிப்பிலான பணம் செல்போன்கள் மற்றும் ஒரு துப்பாக்கி போன்ற ஆயுதங்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நிருபர் – வெ.ராம்