மலபார் கோல்டு ஜுவல்லரிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை…

நாடு முழுவதும் மலபார் கோல்டு ஜுவல்லரிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை
இந்தியா முழுவதும் உள்ள 200 க்கும் மேற்பட்ட மலபார் கோல்டு ஜுவல்லரி குழுமத்திற்கு சொந்தமான நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுகுறிப்பாக தமிழகத்தில் மட்டும் சென்னை மற்றும் கோவை உட்பட 64- இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையானது வரி ஏய்ப்பு செய்ததாக தொடர் வந்ததன் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோரனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இந்த சோதனையின் முடிவிலேயே எவ்வளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது என்றும் என்னென்ன ஆவணங்கள் சிக்கியுள்ளது என தெரியும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சோதனை முடிவிலேயே பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…