Mon. Apr 7th, 2025

வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர் | உடலை வாங்க மறுத்த உறவினர்கள்..|

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த சிலருக்கும், மருதம் நகரைச் சேர்ந்த ராஜா என்ற இளைஞருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவன் ராஜா
நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 6 பேரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அந்த குற்றவாளிகளை விரைந்து கைது
செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடலை வாங்க மறுக்கும் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்…