Thu. Dec 19th, 2024

உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி அவர்களுக்கு வழங்கிய ஜனாதிபதி விருது சாதனைக்கா..???

சென்னை பெரு நகர காவல்துறை ஆணையர்திரு ஏ.கே.விஸ்வநாதன் ஐ.பி.எஸ் அவர்கள் சென்னை மாநகர மக்கள் பிரச்சனையில் சாதனை செய்த, போலீஸ்காரர் முதல் கூடுதல் ஆணையர் வரை அனைவரையும் அழைத்து பாராட்டுகிறார்…மிகவும் மகழ்ச்சியாக உள்ளது.

இந்திய குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான காவல் விருது, உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி அவர்கள் 5.1.17 முதல் 31.5.18 வரை சென்னை பெரு நகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிய போது, செய்த சாதனைக்காக கொடுக்கப்பட்டது..

உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி அவர்கள் மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிய போது, என்ன சாதனை செய்தார்கள்…அந்த சாதனையின் விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி கேட்டோம்..

மூன்றாம் நபர் தகவல்கள் என்பதால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விதி 8(i)(j)ன்படி தகவல் அளிக்க பொதுத் தகவல் அலுவலர் மறுத்துவிட்டார். மேல்முறையீடு செய்த போதும், மேல்முறையீட்டு அலுவலர் பொதுத் தகவல் அலுவலர் கூறிய காரணத்தை சொல்லி தகவல் அளிக்க மறுத்துவிட்டார்.

மூன்றாம் நபர் தகவல்கள் என்பது, உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி அவர்கள் பர்சனல் தகவல்களை கேட்பதுதான்..இந்திய குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்காக கொடுக்கப்பட்ட விருது, என்ன சாதனைக்காக கொடுக்கப்பட்டது என்பது பொதுவான தகவல்..

பொதுவான தகவலை கொடுக்க மறுப்பதை பார்க்கும் போது, கொடுக்கப்பட்ட விருது, சாதனைக்கா.. என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னை பெரு நகர காவல்துறை ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன் ஐ.பி.எஸ் அவர்கள் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி அவர்களுக்கு கொடுக்கப்பட்ட விருது தொடர்பான சாதனையை அறிக்கை மூலம் வெளியிட்டால் நல்லாயிருக்கும்…பத்திரிகையாளர்களும் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி அவர்கள் செய்த சாதனைகளை வெளியிடுவார்களா..??

சென்னை பெரு நகர காவல்துறை பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர், உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி அவர்களுக்கு கொடுக்கப்பட்ட விருதின் பின்னணி சாதனையை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அளிக்க மறுத்த காரணத்தால், ஜனாதிபதி அலுவலகத்துக்கு சாதனையின் விவரங்களை கேட்டு கடிதம் அனுப்பி உள்ளோம்..