போலி ஆவணம் மூலம் குத்தகை நிலத்தை அபகரிக்க முயன்ற மூவர் | கைது செய்த குற்றப்பிரிவு போலீசார்…|
குத்தககைக்கு கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயன்ற 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அடுத்த சேலையூரை சேர்ந்தவர் தேவ அன்பு. இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவரது தாத்தா கனி என்பவர் பெயரில் 5 கோடி மதிப்புள்ள 88 செண்ட் நிலம் சொந்தமாக வைத்துள்ளார்.
அதை பொன்னுசாமி ,ஆறுமுகம் என்ற இரண்டு பேருக்கு பயிர் செய்வதற்காக குத்தகைக்கு கொடுத்துள்ளார். பின் கடந்த சில ஆண்டுகளாக பயிரிடப்படவில்லை.
இந்நிலையில் பொன்னுசாமி மற்றும் ஆறுமுகத்தின் மகன்கள் அருள் நாதன்,துறை,திருமலை ஆகியோர் தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து 5 போலி ஆவணங்கள் தயாரித்து அந்த நிலத்தை விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.
இதனை அறிந்த தேவ அன்பு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிசாரிடம் புகார் அளித்திருந்தார். புகார் அடிப்படையில் விசாரணை செய்ததில் புகார் உண்மையானதால், நில அபகரிப்பில் ஈடுபட்ட பொன்னுசாமி, ஆறுமுகம் மற்றும் அவரது மகன்கள்,மகள்கள் என 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதில் அருள் நாதன், துறை, திருமலை ஆகியோரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்…