விமானத்தில் சீட்டுக்கு அடியில் சுமார் 2-கோடி மதிப்புள்ள 5.72 கிலோ தங்கம்..!!
வருவாய் புலனாய்வு பிரிவினர் கடந்த 21ம் தேதி நடத்திய திடீர் சோதனையில் 6.24, கோடி ரூபாய் மதிப்பிலான 17.9, கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த தங்கம் சென்னை விமான நிலையம் வழியே குருவிகள் மற்றும் மின்சாதன பொருட்கள் மூலமாக கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது திடீர் சோதனையில் சுமார் 1- கோடி மதிப்பிலான விலையுயர்ந்த மின்சாதன பொருட்களும், வெளிநாட்டு சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 33 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு மற்றும் இந்திய ரூபாய்களை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பணம் கடத்தி வரப்பட்ட பொருட்கள் விற்பனை மற்றும் ஹவாலா மூலம் கிடைத்ததாக கண்டறியபட்டுள்ளது. பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்ட 3 விலை உயர்ந்த வாகனங்களையும் வருவாய் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர்.
விசாரணையில் இந்த கும்பல்களின் தலைவன் மலேசியாவில் இருந்து செயல்படுவதாகவும், துபாய், மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இருந்து இந்தியா திரும்புபவர்களை மூளை சலவை செய்து கடத்தல் செய்ய தூண்டியதும் இதில் முக்கிய புள்ளியாக செயல்பட்டவர், அவரின் ஊழியர்கள் மற்றும் உறவினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
காஜா, மாலிக், அபு உள்ளிட்ட 11 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தலுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டதாக தெரிகிறது. கடந்த 18ம் தேதி விமான நிலையத்தில் ஒரு சர்வதேச விமான இருக்கைக்கு அடியில் இருந்து, சுமார் 2-கோடி மதிப்புள்ள 5.72 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது…