Fri. Dec 20th, 2024

சென்னை | ஆட்டோவில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த பெண் வியாபாரி கைது

10 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்

சென்னை வண்ணாரபேட்டையில் இருந்து ஆட்டோ மூலம் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த டயானா (எ) லட்சுமி (20) த/பெ, பெருமாள், முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த இவரை வடக்கு கடற்கரை காவல் நிலைய உதவி ஆணையர் திரு.ஆனந்த் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை செய்து நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்

மற்றொரு எதிரியான பிரபல கஞ்சா வியாபாரி கிருஷ்ணவேணி (எ) ஆப்பிள் (70) க/பெ.கிருஷ்ணகுட்டி அன்னை சத்தியா நகர் பகுதியை சேர்ந்தவர் தலைமறைவு விசாரணையில் மேற்படி பெண் ஆந்திராவிலிருந்து பேருந்து மூலம் கஞ்சாவை எடுத்து வந்து வண்ணாரபேட்டையில் இருந்து ஆட்டோ மூலம் சத்யா நகருக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார் இவர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சிறையிலிருந்து வெளியில் வந்துள்ளார் ஏழுகிணறு மற்றும் முத்தியால்பேட்டை மற்றும் பல காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதாக தகவல்…

சிறப்பு நிருபர்…