Thu. Jul 25th, 2024

இந்திய அரசியல் கட்சிகளிலே தலைமை அலுவலகத்தில் உயரமான கொடிமரத்தை கொண்ட பெருமையை திமுக பெறுகிறது.

இந்திய அரசியல் கட்சிகளிலே தலைமை அலுவலகத்தில் உயரமான கொடிமரத்தை கொண்ட பெருமையை திமுக பெறுகிறது.

திமுக தலைமை அலுவலமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொடியேற்றி துவக்கி வைக்கிறார்.

திமுக தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா சுப்பரமணியன் கட்சியின் தலைமையிடமிடம் மிக பெரிய கொடி கம்பத்தை நிறுவ வேண்டுமென விருப்பத்தை தெரிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டார்.

சென்னையில் இதய பகுதியாய் கருத படும் அண்ணாசாலையில் பிரம்மாண்ட இரும்பினால் செய்யபட்ட கொடி மரம்எடையுள்ள 2430கிலோ கொண்டது. வாகா எல்லையில் 320அடி உயரம் தேசிய கொடி மரத்தை நிறுவிய நிறுவனத்திடம் திமுக கொடி மரம் அமைக்கும் பணி ஒப்படைக்கபட்டது.

பிரம்மாணட இந்த கொடி மரத்தில் 20அடி நீளம் 30அடி அகலம் வெல்வெட் துணியால் தயாரிக்கபட்ட கொடி மோட்டார் மூலம் ஏற்றபடும். கொடி உச்சியில் நின்று பறப்பதற்கு 11நிமிடங்கள் ஆகும் கூறப்படுகிறது நான்கு மாதத்திற்கு ஒரு முறை கொடியினை மாற்றும் வகையில் கொடி அமைக்கபட்டுள்ளது…

சுபாஷ் சந்திர போஸ்