Sun. Dec 22nd, 2024

மோடிக்கு சவால் விட்ட லேடியின் கட்சி | இன்று மோடியிடமே அடங்கிக்கிடக்கிறது..!!!

நாடாளுமன்றத்திற்கு நடைபெறவுள்ள தேர்தலுக்காக அதிமுக, பாஜக, பாமக இடையே கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டு தொகுதிகளும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமை பயத்தின் காரணத்தாலோ அல்லது வேறு காரனங்களுக்காவோ தமிழகத்தின் நலன்களை குறித்த எவ்வித அக்கறையுமின்றி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் பாஜகவிற்கு தமிழகத்தில் போதிய ஆதரவு இல்லை என்பது வெள்ளிடை நீர் போல அனைவருக்கும் தெரிந்தது. அவர்கள் தனித்து நின்றார்கள் என்றால் டெபொசிட் கூட பெறமாட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். ஆனால் அவர்களுடன் அதிமுக கூட்டணி வைப்பது தற்போதைய நிலையில் தற்கொலைக்கு சமமானதாகும். மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து கால் பதிக்கும் பாஜக பிறகு கூடாரத்தில் நுழைந்த ஒட்டகம் போல அவர்களையே வெளியே துரத்த செய்யும். குஜராத்தும், பீகாரும், கர்நாடகமும் நமக்கு அந்த பாடங்களையே சொல்லித்தருகிறது. மோடிக்கு சவால் விட்டு நின்ற லேடியின் கட்சி இன்றைக்கு மோடியிடம் அடங்கிக் கிடப்பது அதிமுகவிற்கே அவமானம்.

திராவிட கட்சிகளுடன் இனி எக்காலத்திலும் ஒட்டுமில்லை உறவுமில்லை என முக்கு மூலை எங்கும் முழங்கிய பாமக வெட்கமேயின்றி அதிமுகவுடன் இணைந்துள்ளது. தமிழக நலனே முக்கியம் என்று முழங்கியவர்கள் தமிழகத்தை பல்வேறு நாசகரதிட்டங்களின் மூலம் சீரழிக்கத் துடிக்கும் பாஜகவுடன் கை கோர்த்திருப்பது என்ன நியாயத்தின் அடிப்படையில் என்பதை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தையும் ஒற்றுமையையும் அமைதியையும் சீர்குலைக்கும் நாசகர சக்திகளான ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார், பாஜக கும்பலை இந்த தேர்தலில் தோற்கடித்து நாட்டில் அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்ட தமிழக மக்கள் முன்வர வேண்டும் என வெல்பேர் கட்சி, தமிழக நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

கே. எஸ்.அப்துல் ரஹ்மான், மாநிலப் பொதுச்செயலாளர்