Fri. Dec 20th, 2024

வயதான தம்பதி வெட்டிக்கொலை | சொத்துகாக உறவினர்களால் கொலையா.?

ஈரோடுமாவட்டம் சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையம் கோனேரிகாடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி 65 இவரது மனைவி துளசிமணி 60 இத்தம்பதியினருக்கு மூன்று மகன் ஒரு மகன் உள்ளனர். மகள்கள் மூவருக்கும் திருமணமாகிவிட்டது. திருமணமாகாத மகன் வெங்கடாச்சலம் தாய்தந்தையுடன் வசித்து வருகிறார் இந்நிலையில் நேற்று 19-02-19  (செவ்வாய் கிழமை) மாலையில் பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிநடக்கும் பௌர்ணமி பூஜையில் கலந்து கொள்வதற்காக வெங்கடேஸ் சென்றுவிட்டார். இந்த சூழ்நிலையில் இன்று (அதாவது நேற்று) காலை 9:30 மணியளவில் அவரது வீட்டில் கட்டியிருந்த மாடுகள் கத்திக்கொண்டே இருந்தன இதை கண்ட பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் துரைசாமி வீடு திறந்து கிடப்பதையும் அங்கு துரைசாமியோ அவரது மனைவியோ மாடுகள் கத்துவதை பொருட்படுத்தாமல் இருப்பதையும் அவரது வீட்டில் அட்கள் நடமாட்டம் ஏதுமின்றி வெறிச்சோடி கிடப்பதையும் கவனித்து துரைசாமி வீட்டிற்கு சென்று பார்த்திருக்கிறார் அங்கு வீட்டின் உட்புறமிருந்த வாசலில் துரைசாமியும், துளசிமணியும் ரத்த சகதியில் பிணமாக கிடப்பதை கண்ட அவர் உடனடியாக அக்கம் பக்கத்தினரை அழைத்திருக்கிறார் அவர்கள் மூலம் சென்னிமலை காவல்நிலைத்திற்கு தகவலளிக்கபட்டது இத்தகவலின் பேரில் விரைந்து சென்ற சென்னிமலை காவல் ஆய்வாளர் (பொருப்பு) திரு மணிகண்டன், உடனடியாக ஈரோடு ஊரக உட்கோட்ட கண்காணிப்பாளர் திரு ராஜாகுமாருக்கு தகவலளித்தார் மேலும் ஈரோட்டிலிருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது கைரேகை நிபுநர்கள் விரைந்துவந்தனர். தம்பதி பிணமாக கிடந்த இடத்திலிருந்து சுமார் ஒரு பர்லாங் தூரம் ஓடிய மோப்பநாய் அங்கிருந்து திரும்பி விட்டது யாரையும் கவ்விபிடிக்கவில்லை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி எஸ்பி ராஜாகுமார் போலீசாருக்கு தகுந்த உத்தரவுகள் பிறப்பித்து தம்பதியின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தார். 

அவரது ஆலோசனையில் பேரில் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான தனிப்படை போலீசார் தம்பதியினர் சொத்துகாக உறவினர்களால் கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்