சூழலியல் போராளி தோழர் முகிலன் எங்கே கடத்தப்பட்டாரா? | கார்ப்பரேட்டுகளால் கொல்லப்பட்டாரா? | சந்தேகத்தை கிளப்பும் வெல்ஃபேர் கட்சி…
நேற்று முன்தினம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற படுகொலை குறித்து முகிலன் ‘மறைக்கப்பட்ட உண்மைகள்: கொளுத்தியது யார்?’ என்னும் ஆவணங்களை வெளியிட்டுள்ளார்.
அந்நிகழ்வில் பூவுலகின் நண்பர்கள் தோழர்.ஆர்.ஆர்.சீனிவாசன், நேர்மை மக்கள் இயக்கம் பழ.ரகுபதி, இளம்தமிழகம் செந்தில், தமிழ்தேச மக்கள் முன்னணி பரிமளா, மே 17 இயக்கம் சபரி, மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனையடுத்து நேற்று முன்தின இரவு தொடர் வண்டியில் சென்னையிலிருந்து மதுரைக்கு கிளம்பியுள்ளார். அதன்பிறகு அவரை தொடர்புகொள்ளமுடியவில்லை, அவர் மதுரைக்கும் செல்லவில்லை. இதனால் அவர் கடத்தப்பட்டாரா??? இல்லை கார்ப்பரேட்டுகளால்…………… என்ற சந்தேகம் எழுகிறது.
இயற்கை வளம் காக்கவும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்து களமாடி வருபவர் தோழர் முகிலன்.
தோழர் முகிலன் போன்றவர்களை காப்பதற்கு வெல்ஃபேர் கட்சி அரசியல் ரீதியாக தொடர்ந்து போராடும் என கட்சியில் மாநில செயலாளர் ம.முகமது கவுஸ் தெரிவித்தார்.