மாணவன் படிப்பு செலவுக்காக நடத்திய கடை உடைப்பு | சிசிடிவி கேமராவில் சிக்கிய காவல்துறை ஆய்வாளர் | வீடியோ ஆதாரம்…
ஒரு நாட்டை பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு எப்படி ஒரு இராணுவ வீரனுக்கு தலையாய கடமையோ… அதே போல் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு காவல் அதிகாரிகளுக்கு உண்டு… ஆனால் இக்கட்டுரையில் இணைக்கப்ட்ட வீடியோ வைத்துப்பார்த்தால் ஒருசில காவல்துறையினரின் வெறிச்செயல் தெரியும்..!!!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் அப்துல் ரகுமான். இவர் காலை கல்லூரி படிப்பை முடித்த பிறகு, மாலை நேரத்தில் பெரியமேடு பகுதியில் தள்ளுவண்டிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்தத் தள்ளுவண்டி கடையால் வரும் வருமானத்தை தனது கல்லூரி படிப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இவரது கடையை 8-ம் தேதி மர்ம நபர்கள் சிலர் உடைத்துவிட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரை எடுத்த அப்பகுதி ஆய்வாளர் சிவராஜன் விரைவில் உடைத்தது யார் என கண்டுபிடித்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.
அதன் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வாக்குறுதி அளித்த ஆய்வாளர் சிவராஜன் தலைமையில் தான் மாணவன் நடத்தி வந்த கடையை உடைத்திருப்பது தெரியவந்தது.
சென்னை மாநகரம் முழுவதும் குற்றங்களை கண்டுபிடிக்க காவல்துறையே சிசிடிவி கேமரா பொருத்தி வரும் இந்த நிலையில்… காசு கொடுக்கலைனா ஆள் இல்லாத நேரம் பார்த்து கடைய உடைப்போம் என்று ஒரு காவல்துறை அதிகாரியே மாமுல் தராத காரணத்தால் ஏழை மாணவன் நடத்தி வரும் தள்ளுவண்டி கடையை உடைத்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அந்த ஆய்வாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பார..? இல்லை என்றால் வழக்கம் போல்…….??????????