Sun. Oct 6th, 2024

சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக அதிகாரி காமகோடி நிதிநிலை அறிக்கை வெளியிட்டார் | Peranmai News

(28 – 01 2019) கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி இன்றுவரை 516 கிளைகள் மற்றும் 1656 தானியங்கி இயந்திரங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. விவசாயக் கடன் 18 சதவீதம் என்பது அனைத்து வங்கிகளின் டார்கெட்டாக உள்ளது. அதை இன்றுவரை சரியாக கடைபிடித்து வருகிறோம். கஜா புயல் பாதிப்பிற்காக ஒரு கோடி ரூபாய் நிதியை முதலமைச்சரிடம் வழங்கினோம். வங்கியில் 2018 -19 ஆம் நிதியாண்டில் மூன்றாம் காலாண்டு மற்றும் 9 மாத முடிவுகள் வங்கியில் இயக்குனர் குழுமத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கடந்த வருட ஒத்த காலாண்டை விட நிகர வட்டி வருமானம் 15 சதவீதம் உயர்ந்து 418 கோடியாகவும் மொத்த இலாபம் 4 சதவீதம் உயர்ந்து 307 கோடியாகவும் நிகர வாராக்கடன் 1.74 சதவீதமாகவும் வங்கியின் வருவதாகவும் 1.68 ஆகவும் உள்ளது.

ஒன்பது மாதங்களில் வங்கியின் மொத்த வியாபாரம் கடந்த ஆண்டு வரை 15 சதவீதம் உயர்ந்துள்ளது வங்கியில் வைப்புத் தொகை மற்றும் கடன்கள் கடந்த ஆண்டைவிட 13% இருந்து 17 ஆக உயர்ந்து 35,504 கோடியாகவும் 30,637 கோடியாகவும் அதிகரித்துள்ளது.