Fri. Dec 20th, 2024

பெருந்துறையில் விளைநிலம் ஆக்கிரமிப்பு | 60 க்கு மேற்பட்ட விவசாயிகள் கைது | Peranmai News

பெருந்துறையில் விளைநிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்ட 60 விவசாயிகள் கைது…

(24 – 01 – 2019) திருப்பூர் மாவட்டம் புகளூரிலிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு 400 மெகா வாட்ஸ் மின்சாரம் கொண்டு செல்ல விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது

இவ்வாறு அமைப்பதால் விளை நிலங்கள் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் என தெரிவித்த விவசாயிகள், பல்வேறு கட்ட போராட்டங்களான காத்திருப்பு போராட்டம், தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனிடையே இன்று பெருந்துறை அருகே உள்ள தென்முகம் வெள்ளோடு முதலியா கவுண்டன்வலசு பகுதியில் ஆறுமுகம் என்பவரது தோட்டத்தில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் காவல்துறை உதவியுடன்  நடைபெற்று வருவதாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விவசாயிகள் அந்த பகுதிக்கு சென்றனர். உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தினர் விளை நிலத்தில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர் இதனையடுத்து எதிர்ப்பு தெரிவித்த நிலத்தின் உரிமையாளர் ஆறுமுகம் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போராடிய விவசாயிகளை அப்புறப்படுத்திய பின்பு காவல்துறையினர் உதவியுடன் விளை நிலங்களில் மின்கோபுரம் அமைக்கும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர்…

நன்றி :- சண்முகசுந்தரம்