காஞ்சிபுரம் பஸ்நிலைய கடைகள் உடைப்பு | கடை உரிமையாளர்கள் வீதியில் போராட்டம் | Peranmai News
காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் உள்ள கடைகள் பேருந்து செல்ல வழியின்றி ஆக்கிரமித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டபோது அங்குள்ள கடைகள் பேருந்துகள் செல்ல பொதுமக்கள் செல்ல வழியின்றி தவிப்பதை பார்வையிட்டு உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். அதன்படி காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் கடைகளுக்கு சென்று ஒருவார காலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் கொடுத்தும் அகற்றப்படாததால் காஞ்சிபுரம் பெருநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் கடைகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினார். கடை உரிமையாளர்கள் ஒன்றுகூடி அகற்ற விடாமல் தடுத்ததால் பஸ் நிலையம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. சாலை மறியல் செய்ய முயன்ற கடை உரிமையாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கடை உரிமையாளர்கள் போராட்டங்களால் பஸ்நிலையம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற D.S.P பாலசுப்ரமணியன் போராட்டம் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒருநாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு கடை உரிமையாளர்கள் கலைந்து சென்றனர்.