Thu. Dec 19th, 2024

சென்னையில் புதிய கிரிக்கெட் பயிற்சி மையம் நவீன கருவிகளுடன் சிறுவர்களுக்கு பயிற்சி…!!!

சென்னையில் ரோகித் ஷர்மா கிரிக்கெட் பயிற்சி மையம்
நவீன கருவியுடன் உலகத் தர பயிற்சி என தகவல்

கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா பெயரில் இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் கிரிக்கெட் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பத்துடன் மணப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையத்தை தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ரோகித் ஷர்மா பெயரில் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ள பயிற்சி மையத்தில், சர்வதேச தரத்தில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், இளைஞர்களின் ஆர்வம் தெரிந்து அது சார்ந்த பயிற்சிக்கு அனுப்ப வேண்டும் என்றார். மீனவர்களை நீச்சல் போட்டிக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.