Thu. Dec 19th, 2024

காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மீது பால் முகவர்கள் சங்கம் புகார்…!!

காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மீது பால் முகவர்கள் சங்கம் புகார்…!!

கட்அவுட்களுக்கு அண்டா, அண்டாவாக பாலாபிஷேகம் செய்யுங்கள் என ரசிகர்களை உசுப்பேற்றி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பேசி காணொளி வெளியிட்ட *நடிகர் சிம்பு மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரியும்,

கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய நிரந்தரமாக தடை விதிக்க கோரியும்…,

வந்தா ராஜாவா வருவேன்” திரைப்படம் வெளியாகும் நாளில் பால் முகவர்களின் கடைகளில் இருந்து பால் திருடு போகாமல் தடுக்க காவல்துறை பாதுகாப்பு அளிக்க கோரியும்…

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் இன்று புதன்கிழமை (23.01.2019) பிற்பகல் 12.30மணியளவில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இணைப்பு :- புகார் மனு நகல் மற்றும் மனு ஏற்கப்பட்டதற்கான ஒப்புகைச் சீட்டு

அன்புடன்
சு.ஆ.பொன்னுசாமி (நிறுவனர்)
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்…