Sun. Oct 6th, 2024

புதிய கட்சி துவக்கினார், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு…!!!

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வினயரசு அவர்கள் தமிழர் தேசிய குற்றம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்…

மூன்றாண்டு காலமாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு வந்த திரு.அ.வியனரசு அவர்கள் கட்சியில் நடக்கும் ஒரு சாதி ஆதிக்கம், உட்கட்சி ஜனநாயகம் மறுப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை கடந்த ஓராண்டு காலமாக வலியுறுத்தினார்.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை விரிவாக்கத் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது என 3-7-2017 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் தொடங்கிய போராட்டம் பின்னர் மக்களின் புரட்சி ஆக மாறி மே 22ம் தேதி துப்பாக்கிச்சூடு நடைபெற்று 14 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர் 600 பேருக்கு மேல் பொய் வழக்கு எனவும் காவல்துறையின் பல அடக்குமுறைக்கு உள்ளான இந்நிலையில் இருந்தோம்.

நாம் தமிழர் கட்சி அந்த போராட்டத்தை முன்னிலும் கூடுதலாக எழுச்சியோடு முன்னெடுக்காமல் பின்னடைவுக்கு அழைத்து செயல்பட்டதால் மக்களிடையே ஏற்பட்ட ஐயப்பாடுகளை விளக்கி தலைமை ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு 10-11-2018 நாளில் 9 பக்கம் மனம் திறந்த மடல் எழுதி விளக்கம் கேட்டேன் அதன்பிறகு 8, 10,12- 2018 நாட்களில் மீண்டும் விளக்கம் கேட்டேன் அதற்கு பின் இரண்டு முறை நேரில் சந்திக்க முயன்றும் சந்திக்க முடியாததால் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட மக்கள் நீதிக் கொற்றம் என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தி 22-12-18 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம். சீமான் அவர்களை அழைக்கவில்லை என்பதால் உள்முரண்களை ஊடகங்களால் வெளிப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையுடன் சமரசம் ஆனதாக குற்றம் சாட்டினார் அது குறித்து என்னிடம் எவ்வகையான விசாரிப்பு விளக்கமும் கேட்காமல் 8-6-2018 அன்று அப்பட்டமான உட்கட்சி ஜனநாயகம் விரோதப் போக்கில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் 18-1- 2019 திருச்சியில் எனது தலைமையில் நடைபெற்ற தமிழ் உணர்வாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்குவது என முடிவு எடுத்து அதன் தலைவராக நான் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பாண்டியன் மாநில ஒருங்கிணைப்பாளராக அருள்மணி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ள மற்ற நிர்வாகிகளை அடுத்த கட்ட கலந்தாய்வு கட்டத்தில் தேர்வு செய்து அறிவிப்போம் தமிழ்மொழி தமிழக மக்களின் நலனுக்காகவும் தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் அதற்கான அறவழிப் போராட்டங்களில் ஈடுபடும் மற்றும் விரிவான கொள்கையை செயல் திட்ட அறிக்கையும் மார்ச் மாத இறுதியில் கரூரில் நடைபெறும் கொள்கை விளக்க மாநாடு வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் திரு.அ.வியனரசு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்…